ஐரோப்பா

ரஷ்யா எதிர்கால அறிஞர்கள், கலைஞர்களை அழித்துள்ளது : போரில் உயிரிழந்த குழந்தைகள் குறித்து செலன்ஸ்கி உருக்கம்!

டினிப்ரோவில் நடத்தப்பட்ட செல் தாக்குதலில் லிசா என்ற பெண் குழந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து போரில் உயிரிழந்த குழந்தைகள் குறித்து புள்ளிவிபர தகவல்களை உக்ரைன் அதிபர் செலன்ஷ்கி வெளியிட்டுள்ளார்.

இதன்படி உக்ரைனில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் இதுவரை 500 குழந்தைகள் பலியாகியுள்ளதாக செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா எதிர்கால அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு சாம்பியன்களின்” உயிரைப் பறித்ததாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“ரஷ்ய ஆயுதங்கள்  ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளின் உயிரைப் பறித்து அழித்துக் கொண்டே இருக்கிறது”, எனவும்,  தொடர்ந்து இடம்பெற்றுவரும் பகைமையினால் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக நிறுவ முடியாது எனவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“உக்ரைன் முழுவதும், எங்கள் மக்கள் அனைவரும், எங்கள் குழந்தைகள் அனைவரும் ரஷ்ய பயங்கரவாதத்திலிருந்து விடுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்