ஒலியை விட பல மடங்கு வேகமான ஏவுகணைகளால் உக்ரேனை அழிக்கும் ரஷ்யா
உக்ரேன் தலைநகர் கீவிலுள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது அதிநவீன ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
தாக்குதலால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
எனினும் கீவ் நகரில் நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று, உக்ரைனின் மத்திய பகுதியில் அமைந்த கிரிவி ரீ என்ற நகரத்தின் மீது நடந்த மற்றொரு தாக்குதலில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த தாக்குதலில், கின்ஜால் என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ரஷியாவிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களில் இதுவும் ஒன்றாகும் என உக்ரேன் தெரவித்துள்ளது.





