வடகொரியாவில் ஆளும் கட்சியின் ஆண்டு விழா – காட்சிப்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகள்!

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் சக்தி மிக்க ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சீனா பிரதமர் லி கெகியாங், ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது ‘ஹ்வாசொங்-20’ எனப்படும் அதன் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது.
அத்துடன் நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.
(Visited 2 times, 1 visits today)