தமிழ் சினிமாவில் மீண்டும் மலர்ந்த “ரோஜா”!
சினிமாவில் இருந்து அரசியல் களம் புகுந்த நடிகை ரோஜா, பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
90 களில் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜாவுக்கென ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் சாதித்து காட்டியவர் ரோஜா.
தற்போது அவர் நடித்துள்ள படத்தின், புதிய “போஸ்டரை” படக்குழு வெளியிட்டுள்ளது.
லெனின் பாண்டியன் படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இப் படத்தில் முக்கியமான திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பாடகர், இசையமைப்பாளர் என பல துறைகளில் திறமை மிக்க கங்கை அமரன் நடித்துள்ளார்.
நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் திரையுலகில் திரும்பி வந்துள்ளார்.
இவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசனும் களமிறங்கியுள்ளார்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஏ. எம். எட்வின் சக்காய் கவனிக்க, தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், லெனின் பாண்டியன படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கங்கை அமரன், ரோஜா வயதான தோற்றத்திலும், தர்ஷன் கணேஷ் காவல்துறை உடையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.
கிராமப்புறத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் எப்போது வெளியாகும் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.





