ஓஸ்கார் விருது வென்ற பிரபல நடிகர் Robert Redford காலமானார்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகர் ரொபர்ட் ரெட்ஃபோர்ட் (Robert Redford) தனது 89-ஆவது வயதில் காலமானார்.
ரெட்ஃபோர்ட் இன்று (16) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் உள்ள சன்டான்ஸ் பகுதியில் அவரது வீட்டில் காலமானார்.
1985 ஆம் ஆண்டு வெளியான “அவுட் ஆஃப் ஆப்பிரிக்கா” (Out of Africa) திரைப்படத்தில் நடித்ததற்காக ரொபர்ட் ரெட்ஃபோர்ட் ஓஸ்கார் விருது வென்றார்.
அமெரிக்காவின் யூட்டாவில் Sundance திரைப்பட விழாவை நிறுவியதற்காகவும் ரெட்ஃபோர்ட் பரவலாக அறியப்படுகிறார்.
இந்த விழா சுதந்திர திரைப்படங்களின் மையமாக மாறியது.1980 ஆம் ஆண்டு “ஆர்டினரி பீபிள்” (Ordinary People) படத்திற்காக சிறந்த இயக்குநர் உட்பட நான்கு அகாடமி விருதுகளை வென்றார்.
இந்தப் படம் குடும்ப சோகத்தை சித்தரித்து விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.ரெட்ஃபோர்ட் 2018-இல் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவரது தொழில் வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. மேலும் அவர் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், சுதந்திர திரைப்படங்களின் பாதுகாவலராகவும் புகழ்பெற்றார்.