இலங்கை

கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதி – கடும் நெருக்கடியில் மக்கள்

இராஜகிரிய – கொழும்பு வீதியில், டி.எஸ். சேனநாயக்க மாவத்தை அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியதால், அப்பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிய போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிக்கை ஒன்றைவௌியிட்டு தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மாற்று வழிகள்,

மொடல் ஃபார்ம் சந்தி வழியாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் மொடல் ஃபார்ம் சந்தியிலிருந்து பொரளை மயானம் சுற்றுவட்டத்தை நோக்கிச் சென்று பேஸ்லைன் வீதிக்குள் நுழையலாம்.

ராஜகிரியவிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் ஆயுர்வேத சுற்றுவட்டத்திலிருந்து கோட்டா வீதி வழியாக கொழும்புக்குள் நுழையலாம்.

கொழும்பிலிருந்து மொடல் ஃபார்ம் சந்தி வழியாக ஸ்ரீ ஜவர்தனபுர வீதியை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்க சந்தியில் இடதுபுறம் திரும்பி, பொரளை சந்தி வழியாக கோட்டா வீதி ஊடாக ஸ்ரீ ஜவர்தனபுர வீதிக்குள் நுழையலாம்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்