எனக்கு இன்னொரு பெயர் இருக்கு; பட்டையை கிளப்பும் ரவியின் புதிய பட டைட்டில்
டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவியின் 34-வது திரைப்படத்தை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி அரசியல்வாதியாக நடிக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சட்டசபையில் ரவி மோகன் பேசும் காட்சிகளுடன் வெளியான இந்த டீசரின் இறுதியில் இப்படத்தின் பெயர் கராத்தே பாபு என குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)





