பொழுதுபோக்கு

இலங்கையில் எடுக்கப்படும் ஹாலிவுட் படம் : வரலட்சுமிக்கு கிடைத்த அதிஷ்டம்

நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கத்தில் பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் நடிக்கும் படம் ’RIZANA-A Caged Bird’. இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இதன் மூலம் அவர் ஹாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. மேலும் இந்தப் படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இந்தப் படம் பற்றி வரலட்சுமி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாவது, “அகாடமி விருது வென்ற ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படம் ‘ஸ்கார் ஃப்ரம் தி லயன் கிங்’.

எந்தளவுக்கு பிடிக்கும் என்றால், அந்தப் படத்தின் வசனங்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்த கிங்கிற்கு ஜெர்மி ஐயன்ஸ்தான் குரல் கொடுத்திருப்பார்! இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? அவருடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம்.

ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமா ரசிகர்களாலும் அவர் மிகவும் மதிக்கப்படும் நடிகர். இலங்கையிலும் உலகெங்கிலும் திரைப்பட உருவாக்கத்தின் முகத்தை மாற்றிய முன்னோடியான சந்திரன் ருட்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை! சர்வதேச திரைப்படத் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content