ஈரானில் அதிகரித்து வரும் போராட்டம் – தப்பிச் செல்ல தயாராகும் உச்சத்தலைவர்!
ஈரானில் பொருளாதார பிரச்சினையால் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் வலுவடைந்து வருகின்ற நிலையில், அந்நாட்டின் உச்சத்தலைவர் ரஷ்யாவிற்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவர் புட்டினிடம் தஞ்சம் கோரியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போராட்டங்களை கட்டுப்படுத்த அந்நாட்டின் இராணுவம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஈரானில் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக ட்ரம்ப் எச்சரக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இராணுவமும் பாதுகாப்புப் படைகளும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவுகளைப் பின்பற்றத் தவறினால், அவரும் அவரது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட 20 பேரும் மொஸ்கோவிற்குத் தப்பிச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி சன் ஊடகம் தொடர்புடைய செய்தியை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி





