பொருளாதார நெருக்கடியால் ஈரானில் போராட்டங்கள் தீவிரம்

ஈரானின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை எதிர்த்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வெளியான வீடியோக்களில், தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. கடந்த வாரத்திலிருந்து நாட்டின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களில் போராட்டங்கள் நடந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது 19 போராட்டக்காரர்களும், ஒரு பாதுகாப்புப் படை உறுப்பினரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், ஈரானிய அதிகாரிகள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் … Continue reading பொருளாதார நெருக்கடியால் ஈரானில் போராட்டங்கள் தீவிரம்