பயங்கரவாத சட்டத்தை நீக்குங்கள் தமிழர்கள் கோடியில் கொட்டுவார்கள்

வரவு செலவு திட்டத்திலே மக்கள் நலத்திட்டங்களுக்கு அபிவிருத்திகளுக்கு 00.1 வீதத்தை வடக்கு மக்களுக்கு பிச்சை தந்திருக்கிறீர்கள் இந்த பிச்சைகள் எமக்கு வேண்டாம்ஃ
நாங்கள் trilliant million கோடிகள் இந்த நாட்டுக்கு மக்களுக்கு கொட்டுவோம்.
இதனை தருவதற்கு வெளிநாடுகளில் உள்ள எங்கள் உறவுகள் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும்.
இதை நீங்கள் செய்தால் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய அவசியமான பணத்தை நாங்கள் தருகிறோம் என யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாத உரையில் உரையாற்றிய அவர்,
நாங்கள் சிங்கள் மக்களோடு ஒட்டி உறவாடி வாழ விரும்பினாலும் சிங்கள இனம் நீங்கள் எங்களுக்கு வேற்றுமை காட்டுகிறீர்கள்.
பாராளுமன்றத்துக்கு வந்து 77 நாட்களுக்குப் பின் இன்று தான் முறையாகப் பேச பேசுவதற்கு சந்தர்ப்பம் தந்தீர்கள்.
நான் பாராளுமன்றம் வந்த நாளில் இருந்து என்னுடைய ஆசனத்தை அவமான படுத்தினீர்கள்.
வளமான எங்கள் மண்ணில் இருந்து சீமெந்து தந்தோம், கிண்ணியாவில் இருந்து கரும்பு தந்தோம், ஆனையிரவில் இருந்தும் பல வளங்களை தந்தோம்.
ஆனால் நீங்கள் எங்கள் மக்களை கொன்று குவித்தீர்கள், விபுலானந்தர் முதல் காந்தியடிகள் எழுதிய புத்தகங்கள் இருந்த எங்கள் வாசிகசாலைப் பொக்கிஷத்தை எரித்து அழித்தீர்கள்.
எங்கள் இரத்தத்தை உறிஞ்சி எங்கள் இனத்தை அழித்தீர்கள் 1948 ஆம் ஆண்டின் பின் எத்தனை வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டீர்கள்.
தமிழன் ஒரு கொலைகாரன் என சிங்கள மக்களுக்கு சித்தரித்துக் காட்டினீர்கள்.
விஜய வீரா மக்களை கொன்றால் வீரன் பிரபாகரன் மக்களை கொன்றால் பயங்கரவாதி. நாங்கள் தமிழன் என்பதால் வேறுபாடு காட்டுகிறீர்கள்.
இத்தனைக்கும் மத்தியிலும் வரவு செலவு திட்டத்தில் 00.1 வீதத்தை வழங்கி ஏமாற்றி இருக்கிறீர்கள்.
அதுவும் இந்தியாவில் இருந்தும் சீனாவில் இருந்தும் வாங்கி வந்த பிச்சையில் எங்களுக்கு பிச்சை போட்டு இருக்கிறீர்கள் இந்தபிச்சைகள் எமக்கு வேண்டாம் என்றார்.