பொழுதுபோக்கு

பிரபல இளம் நடிகை தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்

மலையாளத்தில் சீரியல், திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஞ்சுஷா மேனன்.

சீரியல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்த ரெஞ்சுஷா மேனன், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

35 வயதே ஆன இளம் நடிகையான ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மலையாள திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீரியல் மூலம் பிரபலமான அவருக்கு சினிமாவிலும் சின்ன கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

சீரியல், சினிமா என இரண்டு பக்கங்களிலும் அதிகமான ஆஃபர்கள் கிடைத்ததால், எப்போதுமே பிஸியாகவே வலம் வந்துள்ளார்.

அவரது கணவர் மனோஜ்ஜும் சீரியல்கள், திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகையாக மட்டும் இல்லாமல் சில சீரியல்களின் இணை தயாரிப்பாளராகவும் பயணித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ரெஞ்சுஷா மேனன். 35 வயதே ஆன இளம் நடிகை தற்கொலை செய்துகொண்டது மலையாள திரையுலகையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்டது பற்றி தகவலறிந்த திருவனந்தபுரம் போலீஸார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். அதன்படி போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக தான் ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், சக நடிகையான அனில் ஸ்ரீதேவியுடன் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜாலியாக ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்ட சில மணி நேரங்களிலேயே ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்டது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதனையடுத்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் ரெஞ்சுஷா மேனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

(Visited 25 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!