உலகம் செய்தி

புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய ஊடக நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் டிஸ்னி இந்திய ஊடகங்கள் இணைப்பால் உருவாகி இருக்கக்கூடிய கூட்டு நிறுவனத்தின் மதிப்பு 70 ஆயிரத்து 352 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது .

ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் வால்ட் டிஸ்னியின் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, மொத்தமாக இந்த கூட்டு நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும்.

ஏனெனில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 63.16 விழுக்காடு பங்குகளையும் டிஸ்னி நிறுவனம் 36.84 பங்குகளையும் கொண்டுள்ளது.

மொத்த பங்குகளில் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 16.34% மற்றும் வியாகாம் 18 46.82% பங்குகளையும் வைத்திருக்கும் என இந்த ஒப்பந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டு அல்லது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இது முழுமையான கூட்டு நிறுவனமாக மாறும் என்னும் ஒழுங்குமுறை விதிகளின் படி பணிகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!