லியோ படத்தை ரிலீஸ் செய்ய திடீரென தடை விதித்த கோர்ட்… பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க அப்படத்திற்கு திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சனை சூழ்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அரசு அனுமதி தர மறுத்துவிட்டதால், செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சென்னையில் உள்ள பெரும்பாலான முன்னணி திரையரங்குகள் லியோ பட புக்கிங்கை இன்னும் தொடங்காமல் வைத்துள்ளனர். விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்களிடம் அதிகளவில் ஷேர் கேட்பதாகவும், இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இன்னும் ஏஜிஎஸ், ரோகினி போன்ற திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்படாமல் உள்ளது.
இந்த பிரச்சனையெல்லாம் போதாதென்று, தற்போது புதிதாக ஆந்திராவில் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. அதன்படி லியோ படத்தை ஆந்திராவில் வருகிற 20-ந் தேதி வரை ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
லியோ என்கிற டைட்டிலோடு அப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து சித்தாரா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐதராபாத் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இதனால் லியோ படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகிற 20-ந் தேதி வரை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதுதொடர்பாக சித்தாரா நிறுவனத்திடம் லியோ பட தரப்பில் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம்.
அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே அப்படம் 19-ந் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.