வட அமெரிக்கா

குவியும் அகதிகள் – மெக்சிகோ எல்லைக்கு 1,500 படை வீரர்களை அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்கா மெக்சிகோ இடையேயான எல்லை பகுதிகளில் 1,500 படை வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தென்மேற்கு எல்லைப் பகுதிகளில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், மெக்சிகோவைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பேட் ரைடர் பேசும் பொழுது, இந்த மாத இறுதியில் அமெரிக்கா தொற்று நோய் கால கட்டுப்பாடுகளை நீக்க இருப்பதாலும், ஊடுருவும் அகதிகளை தடுப்பதற்காகவும் 1500 ராணுவ வீரர்களை 90 நாட்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பாதுகாப்பு வீரர்கள் 90 நாட்களுக்கு தரை சார்ந்த கண்டறிதல், கண்காணிப்பு, பதிவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், கைது உள்ளிட்ட சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஜோ பைடனின் இந்த நடவடிக்கை அதிபர் தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்