திருவண்ணாமலையில் ரீல்ஸ்.. தவறை ஒப்புக்கொண்ட அர்ச்சனாவின் இன்ஸ்டா பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா.
இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலையும் வென்றார். சமூக வலைதளங்களில் எக்டிவாக இருந்து வரும் அர்ச்சனா, போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
திருவண்ணாமலையில் ஏற தடை விதித்திருக்கும் நிலையில், வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் திருவண்ணாமலை உச்சிவரை ஏறி இறங்கி இருக்கிறார்.
அப்போது எடுத்த வீடியோவை வெளியிட்டு, அதில் மலையில் ஏறி இறங்கியது கஷ்டமாக இருந்ததாகவும் இறங்குவதற்குள் இருள் சூழ்ந்து விட்டதால் அச்சமாக இருந்ததாகவும் நீங்கள் மலை ஏறுவதாக இருந்தால், சீக்கிரமாக ஏறி மாலைக்குள் இறங்கி விடுங்கள் என்று அவரது அனுபவத்தை பகிர்ந்து இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த பலர், பொதுமக்களுக்கு தடைவிதிக்கும் வனத்துறை, பிரபலங்களுக்கு மட்டும் தடைவிதிக்க மாட்டார்களா? என்ற கேள்வி எழுந்தது.
மலை ஏறிய விஷயம் தொடர்பாக அர்ச்சனா மற்றும் அருண் பிரசாத்திடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி,இருவருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து இனி மலையேறக் கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பியதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அர்சச்னா தனது இன்ஸ்டாகிராமில் இதற்கு பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
“இதை கற்பனை செய்து பாருங்கள், ஒரு பெண், தனது முதல் மலை ஏற்றத்தை வெற்றிகரமாக கடக்க முடிவு செய்கிறாள். காலணிகள் இல்லாமல் 2,668 அடி உயரம் வரை ஏறினேன்? நான் ஒருபோதும் தொடாத எல்லையை அடைந்த அனுபவம் அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆனால், இறங்கும் போது? பயம், அமைதியை உணர்ந்தேன். அது என்னை முற்றிலும் மாற்றியது. ஆழமான சிந்தித்தேன், உள்ளார்ந்த வலிமையை உணர்ந்தேன்.
என் தவறு தான்- மலையின் சில பகுதிகளில், நல்ல காரணங்களுக்காக தடை செய்யப்பட்டவை என்பதை கற்றுக்கொண்டேன்.
எந்த அறிவிப்பும் பலகையிம் அங்கு இல்லை. மக்கள் கூட்டம் இருந்ததால் அனுமதி இருப்பதாக நினைத்து சென்றுவிட்டேன்.
அதற்குப் பொறுப்பு என்னுடையது தான். முன்கூட்டியே விசாரித்து இருக்க வேண்டும்.
இது ஒரு நேர்மையான தவறு. மிக வலிமையான பாடம். துணிச்சலுக்கு எல்லைகள் தேவை. அதை பாதுகாக்க வனத்துறை எடுத்த முடிவு சரியானதே, விதிகளை மதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்திய அந்த எச்சரிக்கைக்காக நான் நன்றியுடன் இருக்கிறேன். ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகளாக என் பொறுப்பை உணர்கிறேன்.
இந்த நடைபயணம் என்னை உடைக்கவில்லை, என்னை உருவாக்கியது. ஆசைகள் நிறைந்த ஒவ்வொரு மனதிற்கும். அந்த உச்சிகளை நோக்கி ஓடுங்கள், ஆனால் உங்கள் பாதையை முதலில் திட்டமிடுங்கள்.
அதிகாலையில் தொடங்குங்கள், தயாராக இருங்கள், அந்த அமைதியே உங்களுக்குப் பாடம் புகட்டட்டும். இந்த பதிவு, தேவையற்ற சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதில் அளிக்கும் என நம்புகிறேன்” என அர்ச்சனா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





