அமெரிக்கப் பங்குச் சந்தையில் வரலாறு காணாத இழப்பு – பீதியில் முதலீட்டாளர்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் முதலீட்டாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கப் பங்குச் சந்தை நான்கு டிரில்லியன் டொலர் இழந்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் 19ஆம் திகதி S&P 500 குறியீடாக உச்சத்தைத் தொட்டது. அப்போது முதல் S&P 500 பங்கு விலைகள் 8 சதவீதம் குறைந்துள்ளன.
அமெரிக்க நேரப்படி நேற்று S&P 500 பங்கு விலைகள் ஒரே நாளில் ஆக அதிகமாக 2.7 சதவீதம் குறைந்தன. இவ்வாண்டு ஒரே நாளில் பதிவான ஆக மோசமான இறக்கம் இதுவாகும்.
கடந்த மாதம் உச்சத்தை அடைந்த பங்கு விலைகள் இப்போது சரிந்திருப்பது, டிரம்ப்பின் கொள்கைகளுக்கு வர்த்தகர்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் மெக்சிகோ, கனடா, சீனா மீது விதித்திருக்கும் வரிகள் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியிருப்பதாய் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா சீனா இடையே உள்ள பதற்றத்தைப் புரிந்துகொள்ள முடிவதாகவும், மெக்சிகோ, கனடா, ஐரோப்பாவுடன் டிரம்ப் நடந்துகொள்ளும் விதம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.