அரசியல் இலங்கை செய்தி

பதவி விலக தயார்: ரணில் அறிவிப்பு! ஐதேக தலைமைப் பதவியை ஏற்பாரா சஜித்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கு தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவதற்கு தான் தான் தடையென கருதப்படுமானால் இந்த முடிவை எடுக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே ரணில் இவ்வாறு தெரிவித்தாரென சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. எனினும், இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில் இரு கட்சிகளும் இணைவதையே தான் விரும்புவதாக செயற்குழு கூட்டத்தில் ரணில் தெரிவித்துள்ளார்.

“ ஐதேக தலைமைப்பதவியில் இருந்து நான் விலக வேண்டும் என செயல்குழு கருதினால், தீர்மானம் நிறைவேற்றினால் அந்த முடிவை ஏற்பதற்கு நான் தயார்.

சஜித் பிரேமதாசவோ அல்லது தகுதி உடைய ஒருவருக்கு தலைமைப் பதவியை வழங்குவதற்கு நான் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை.” என ரணில் குறிப்பிட்டார் எனவும் மேற்படி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!