விஜய்யின் வெற்றிக்காக ரவி மோகன் தவம்!
“தமிழக வெற்றிக் கழக TVK தலைவர் விஜய்யின் Vijay வெற்றிக்காக பிரார்த்தனை செய்கின்றேன்.” – என்று நடிகர் ரவி மோகன் Ravi Mohan தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி Modi பங்கேற்ற பொங்கல் விழா டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
பொங்கல் விழாவில் பராசக்தி திரைப்படக் குழவினரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர் நடிகர் ரவி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.
விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
“ நான் விஜய்யின் ரசிகனாக, சாத்தியமான அனைத்து இடங்களிலும் அவரின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
ஒவ்வொரு கட்டத்திலும் நான் அவருடைய தீவிர ரசிகன் என்பதை நிரூபித்திருக்கிறேன்” – என்றார்.





