இலங்கை வந்த ரவி மோகனுக்கு வந்த புது பிரச்சனை… அடுத்த கத்தி ரெடி

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ரவி மோகன்.
இதுவரைக்கும் சார் சர்ச்சையில் சிக்காமல் வந்த ரவி மோகன் சமீப காலமாக அவருடைய குடும்ப பிரச்சனை சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்படுகிறார்.
ரவி மோகன் தற்போது கராத்தே பாபு, பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், தனி ஒருவன் 2 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இருப்பினும், கடந்த சில வருடங்களாக அவருக்கு பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் அமையவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே சமீபத்தில் வெற்றி பெற்றது.
தனிப்பட்ட வாழ்க்கையில், மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார். மேலும், பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தன்னை பற்றிய வதந்திகளுக்கு ரவி மோகன் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
மும்பையில் சொந்தமாக அலுவலகம் தொடங்கியுள்ள ரவி, ரவி மோகன் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் கெனிஷாவுடன் இலங்கை சென்ற ரவி மோகன், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவின.
இதுகுறித்து விஜித் ஹெராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரவியும், கெனிஷாவும் இலங்கையில் திரைப்படங்கள் தயாரிப்பது மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றி என்னிடம் பேசினார்கள். இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறும்” என்று பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட பிறகு, இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களுடன் தமிழ் சினிமா நடிகர்கள் கூட்டணி வைத்தால், அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்புவது வழக்கம்.
லைக்கா நிறுவனம் முதன்முதலாக விஜய்யை வைத்து “கத்தி” திரைப்படத்தை எடுத்தபோது எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல், இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தபோதும் எதிர்ப்பு கிளம்பியதால், அவர் அந்த படத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது.
தற்போது ரவி மோகன் இலங்கை அரசுடன் இணைந்து திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை கச்சேரிகள் நடத்துவது பற்றி பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சோசியல் மீடியாவில் பலர் நெகட்டிவ் ஆக கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே ரவி மோகன் மற்றும் கெனிஷா புகைப்படங்கள் இணையத்தில் வெளியான அதே நாளில் ஆர்த்தி ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்த பதிவு வைரலாகி வந்தது.
அதில் ஒருவர் தன்னுடைய சொந்த நாயை விட்டு விட்டு இன்னொரு நாயை கொஞ்சும் போது சொந்த நாய் என்ன செய்யும் என்பது போன்று கேப்ஷன் கொடுத்திருந்தார். அந்தப் பதிவுக்கு கூட பலர் இது ரவி மோகனுக்காகத்தான் அடுத்து இப்படி போஸ்ட் போட்டு இருக்கிறார் என்று கூறி வந்தனர்.
ஏற்கனவே ரவி மோகனுக்கு பல பிரச்சனை இருக்கும் நிலையில் இப்போது புது பிரச்சனையும் தொடங்கி இருக்கிறது. இதற்கு அவர் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.