இலங்கை : புதிய ஜனநாயக முன்னணி சார்பில் பாராளுமன்றம் செல்லும் ரவி கருணாநாயக்க!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றுக்கு ரவி கருணாநாயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொரு பெயர் எதிர்காலத்தில் தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024 பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி 500,835 வாக்குகளைப் பெற்று 02 தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றியது.
(Visited 28 times, 1 visits today)