“ரத்னம்” படம் எப்படி இருக்கு? இத எதிர்பார்க்கவே இல்ல நாங்க…
ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியானத் திரைப்படம் ரத்னம்.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் கடைசியாக திரைப்படம் யானை. இந்த படத்தில் அருண்விஜய், ராதிகா, பிரியா பவானி சங்கர், யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று கணிசமான வசூலை அள்ளியது.
இந்த படத்தை தொடர்ந்து, விஷாலை வைத்து ரத்னம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் இன்று வெளியானது.
ரத்னம் படத்தை பார்ப்பவர்களுக்கும், கதை கேட்பவர்களுக்கும் காதிலும், கண்ணிலும் ரத்தம் தான் வரும். இந்த படம் 30 வருஷத்திற்கு முன்னாடி வந்து இருக்க வேண்டிய படம். இப்போது அனைத்து படங்களும் ரீ ரிலீஸ் ஆகிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த படம் ரீ ரிலீஸாகி இருக்கு என்று நினைத்துக்கொண்டு பார்க்க வேண்டியது தான் என்று கூறுகின்றனர்.
இந்த படத்தின் ஒன் லைன் என்னவென்றால், சமுத்திரக்கனியின் அடி ஆளாக இருக்கிறால் விஷால். இந்த நேரத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் வேலூருக்கு ஒரு இன்டர்வீயூக்காக வராங்க. அப்போது மர்ம கும்பல் ஒன்று பிரியா பவானி ஷங்கரை தாக்க பிளான் போட, விஷால் இந்த பிளானை முறியடித்து காப்பாத்துகிறார். விஷால் எதற்கு பிரியா பவானி ஷங்கரை காப்பாற்றுகிறார்…ரௌடி கும்பல் அவரை கொல்ல நினைப்பது ஏன் என்பது தான் ரத்னம் திரைப்படத்தின் கதை.
வழக்கமான ஹரி படத்தில் இருக்கும் விறுவிறுப்பு, நகைச்சுவை எதுவுமே இல்ல. இந்த படத்தில் யோகி பாபு இருக்கிறார். ஆனால், விஷாலுக்கும் அவருக்கும் காமினேஷன் செட்டாகவில்லை. அதே படத்தில் காதல் காட்சி படத்தோட செட்டாகவே இல்ல, படம் முழுக்க ஏதோ ஒன்று மிஸ் என்று சொல்லும் அளவிற்கு கதை உள்ளது.
இதைத்தவிர படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை படம் முழுக்க ஒரே சண்டை தான். விஷால் மட்டும் தான் எல்லாமே என்பது படத்தில் காட்டி உள்ளார்கள். வேற படம் எதுவும் இல்லை என்பதால், இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்றும் கூறுகின்றனர்.