பொழுதுபோக்கு

கார்த்தியின் சர்தார் 2 படத்தில் இணைந்த சர்ச்சை நபர்.. அப்ப லோகேஷ் கூட்டணி?

நடிகர் கார்த்தி, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த நிலையில் அடுத்ததாக இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்தின் பூஜை வரும் பிப்ரவரி 2ம் தேதி போடப்படவுள்ளது.

மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப்படத்தின் சூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்தான் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குநர் ரத்னகுமார், பிஎஸ் மித்ரனுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜூடன் லியோ உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றிய ரத்னகுமார், ரஜினியின் காக்கா -கழுகு பேச்சு குறித்து லியோ படத்தின் வெற்றிவிழாவில் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இவர் தற்போது லோகேஷின் தலைவர் 171 படத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கவுள்ள நிலையில், ரத்னகுமாரின் சர்ச்சைப் பேச்சுதான் தலைவர் 171 படத்திலிருந்து அவர் நீங்க காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே தன்னுடைய தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடிக்க ரத்னகுமார் புதிய படத்தை இயக்குவதாகவும் அதனால்தான் தலைவர் 171 படத்தில் அவர் இணையவில்லை என்றும் லோகேஷ் கனகராஜ் முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

ஆனால் இந்தப் படமும் துவங்குவதாக இல்லை. இதற்கும் ரத்னகுமாரின் சர்ச்சை பேச்சு தான் காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ள சர்தார் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் ரத்னகுமார் இணைந்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content