புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

நடிப்புக்காக காதலை தூக்கி வீசிய நடிகை.. இன்று நேஷனல் கிரஷ்சாக கலக்கி வருகின்றார்

பான் இந்தியா நடிகையாக அறியப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தவர்.

கூர்க் பொது பள்ளியில் ஆரம்பப் கல்வியை முத்த இவர், பெங்களூரிலுள்ள எம்.எஸ்.ராமையா கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் இருந்ததால், பட வாய்ப்பு தேட துவங்கினார். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, ராஷ்மிகாவுக்கு 2016-ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றுக்கொடுத்தது.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியுடன் காதல் வலையில் சிக்கிய ராஷ்மிகாவுக்கு அவருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. திருமணம் செய்து கொள்ள சில மாதங்கள் இருந்த போது, திடீர் என தன்னுடைய திருமணத்தை ராஷ்மிகா நிறுத்தினார்.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர துவங்கியதே ராஷ்மிகா இந்த திருமணத்தை நிறுத்த மிக முக்கிய காரணம் என கூறப்பட்டது.

2018-ஆம் ஆண்டு கன்னடத்தில் இருந்து ‘சலோ’ படம் மூலம் தெலுங்குக்கு வந்த ரஷ்மிகா, இந்த படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த, ‘கீதா கோவிந்தம்’ ரஷ்மிகா திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடித்த விஜய் தேவார கொண்டா மற்றும் ராஷ்மிகாவின் ஜோடி அதிகம் கவனிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ‘காம்ரேட்’ படத்திலும் இருவரும் மீண்டும் இணைந்து நடித்தனர். மேலும் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிக்கா ஜோடி காதலித்து வருவதாகவும், இருவரும் தங்களுடைய காதலை டேட்டிங் மூலம் வளர்த்து வருவதாக ஒரு தகவல் டோலிவு திரையுலகில் வட்டமிட்டு வருகிறது.

இந்த சந்தேகத்தை உறுதி செய்யும் விதமான பல புகைப்படங்கள் வெளியாகி இவர்களை வசமாக சிக்க வைத்துள்ளது.

ராஷ்மிகாவின் இந்த காதல் சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், தன்னுடைய சினிமா கேரியரில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளை கடந்து…. பாலிவுட் திரையுலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இதை தவிர தற்போது இவர் நடித்து முடித்துள்ள புஷ்பா 2 விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

மேலும் ரெயின்போ, கேர்ள் ஃபிரென்ட், சாவா, குபேரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். படு பிஸியான ஹீரோயினாக இருக்கும், நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா… சிறு வயதில் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

(Visited 48 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்