பொழுதுபோக்கு

30 வயது மூத்த நடிகருடன் ராஷ்மிகா மந்தனா – ஷாக்கான ரசிகர்கள்

கன்னடத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற நிலையில், அங்கு தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்தது.

பின்னர் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ராஷ்மிகா, தன்னுடைய முதல் படமான சுல்தானில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு கோலிவுட்டில் கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் வாரிசு திரைப்படம்.

வம்சி இயக்கிய அப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. தற்போது நடிகை ராஷ்மிகா நடிப்பில் தமிழில் ரெயின்போ என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

தென்னிந்திய மொழிகளில் கலக்கி வந்த ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் வந்தன. அந்த வகையில் அமிதாப் பச்சனின் குட் பாய் படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, மிஷன் மஜ்னு என்கிற படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையடுத்து ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அவர் நடித்த அனிமல் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்ததால் பாலிவுட்டில் ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன.

அந்த வகையில் தற்போது நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டில் ஜாக்பாட் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள சிக்கந்தர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார் ராஷ்மிகா.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் ராஷ்மிகா. 28 வயதாகும் ராஷ்மிகா 58 வயதாகும் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

 

 

 

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்