தமிழ் சினிமா தவற விட்ட தங்கம்… பாலிவூட்டில் கலக்கும் நம்ம “சாரா”
பாலிவூட்டில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘துரந்தர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இதில் ரன்வீர் சிங் மற்றும் அவரது இணை நட்சத்திரமான சாரா அர்ஜுன் இடையே ஒரு சிறிய காதல் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இந்த சாரா அர்ஜூன் யார் என்று தெரியுமா மக்களே…. நம்ம தமிழ் குட்டி பொண்ணுதான். தெய்வதிருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த குட்டி பொண்ணுதான்.
ஆனால் இப்ப சாரா குட்டி பொண்ணு இல்ல. பெரிய பொண்ணு ஆகிட்டாங்க. நம்ம மணி சாரின் பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினியாக கண் முன் வந்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோது, சாரா 40 வயதுடைய ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்தார்.
இருவருக்கும் இடையே 20 வருட வயது வித்தியாசம் காணப்படுகின்றது.

தற்போது, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சாராவுடன் இணைந்து நடித்தது குறித்து ரன்வீர் சிங் தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.
ரன்வீர் சிங் சாரா அர்ஜுனை ஒரு மேதை எனப் பாராட்டினார். சாரா, நீங்கள் ஆயிரக்கணக்கான போட்டியாளர்களைத் தோற்கடித்து இந்தப் பாத்திரத்தைப் பெற்றீர்கள் என்பதற்கு இது ஒரு சான்று என்று நான் நினைக்கிறேன். இப்படத்தில் சாராவின் இயல்பான திறமையையும், ஸ்க்ரீன் பிரசன்ஸையும் நம்புவதாக குறிப்பிட்டார்.





