முதன்முதலாக தீபிகா – ரன்வீர் சிங் குழந்தையின் படங்கள் வெளியாகின

ஹிந்த திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோர் தமது குழந்தையின் முகத்தை முதன்முறையாக உலகுக்கு காட்டியுள்ளனர்.
இவர்கள் இருவரும் 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘துவா’ எனப் பெயர் வைத்ததாக பின்னர் தெரிவித்தார்கள்.
பொதுவாக பிரபலங்கள் அவர்களது குழந்தைகளை வெளி உலகத்திற்கு காண்பிப்பதில்லை. பிரைவசி காரணமாக அவற்றைத் தவிர்த்து வருவார்கள்.
விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினர் இதுவரை தமது இரு குழந்தைகளையும் கெமரா முன்பு காட்டவில்லை. எனினும் தற்செயலாக ஒரு முறை விராட்கோலியின் மகளின் படம் வெளிவந்தது.
இந்த நிலையில், தீபாவளி தினத்தை முன்னிட்டு தீபிகா, ரன்வீர் தம்பதியினர் தங்களது குழந்தையை அறிமுகப்படுத்தி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சில புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டனர். அந்தப் பதிவிற்கு பத்து மணி நேரத்திலேயே ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.