பராசக்தி படத்தில் இணைந்த மாஸ் ஹீரோ… அதிரடி தகவல்

நடிகர் ராணா டக்குபதி பராசக்தி படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லனாக ரவி மோகனும் முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, இலங்கையில் நடைபெற்று முடிந்ததும் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை பொள்ளாச்சியில் துவங்கியுள்ளனர்.
இங்கு, முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில், நேற்று (ஜூலை 22) தொடங்கிய இப்படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டக்குபதி மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
இதனால், பராசக்தி படத்தில் ராணா டக்குபதி இணைந்துள்ளதாக்த் தெரிகிறது.
(Visited 1 times, 1 visits today)