மூன்று தலைமுறைகளுடனும் நடித்த ரம்யா கிருஷ்ணன்

அக்கினேனி நாகேஸ்வரராவ் முதல் அக்கினேனி அகில் வரை, தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த ஒரு கதாநாயகி தான் ரம்யா கிருஷ்ணன்
இவர் தமிழில் 1983ல் வெளிவந்த வெள்ளை மனசு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றவருக்கு படையப்பா படம் தனி அடையாளத்தை உருவாக்கியது.
அக்கினேனி நாகேஸ்வர ராவுடன் இட்டாரு இட்டாரே, சூத்திரதாருலு போன்ற படங்களில் பணியாற்றினார். நாகார்ஜுனாவுடன் சங்கீர்தனா, ஹலோ பிரதர், அன்னமய்யா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நாக சைதன்யாவுடன் சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் மாமியார் வேடத்திலும், பங்கர்ராஜு படத்தில் பாட்டி வேடத்திலும் நடித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)