யாழில் ரம்பா மற்றும் கலா மாஸ்டர்…. படையெடுக்க காத்திருக்கும் நட்சத்திரங்கள்…
																																		யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிஹரன் இசை நிகழ்வுக்காக நடிகை ரம்பா அவரது குடும்பத்தினர் மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் இன்று (06) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09 ஆம் திகதி ஹரிஹரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சாண்டி மாஸ்டர், புகழ், பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்பா மற்றும் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
 
 
(Visited 15 times, 1 visits today)
                                    
        



                        
                            
