“ராக்கயி” புது அவதாரத்தில் மிரட்டும் நயன்தாரா… மிரட்டும் டைட்டில் டீசர்

லேடி சூப்பர் ஸ்டார் என கெத்தாக வலம் வரும் நயன்தாரா இன்று தன்னுடைய நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து கதையின் நாயகியாக நடித்துவரும் நயன்தாரா தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் அவர் நடிக்கும் ராக்காயி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது.
கோவிந்த் வசந்தா இசையில் டீசர் ரத்தக்களரியாக உள்ளது. சிவப்பு நிற புடவை கருப்பு நிற ஜாக்கெட் தலை முடியை கொண்டையிட்டு அவர் நிற்கும் கோலம் நிச்சயம் புது அவதாரம் தான்.
மேலும் இந்த வீடியோவை பார்க்கும் போது இது நிச்சயம் கிராமத்து கதை களம் அதிலும் பல வருடங்களுக்கு முந்தைய காலகட்டமாக இருக்கும் என தெரிகிறது.
(Visited 11 times, 1 visits today)