பொழுதுபோக்கு

நயன்தாரா கதை முடிந்தது… “லேடி சூப்பர்ஸ்டார்” பட்டத்தை தட்டி தூக்கிய பிரபல நடிகை

தமிழ் சினிமாவில்சூப்பர் ஸ்டார்என்றால் ரஜினிகாந்த் என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும் என்று பாடல் ஒன்றே உள்ளது.

அந்த வகையில்லேடி சூப்பர்ஸ்டார்என்றால் அது நயன்தாரா என்றுதானே நாம் நினைத்துக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் அதில் தான் ஒரு டுவிஸ்ட் இருக்கின்றது.

நயன்தாரா தமிழை தாண்டி மலையாலம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் முதல் நடிகையாக வலம் வருகின்றார்.

ஆக அவர்தான் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகின்றார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் கூலி.

இந்தப் படத்தில் கல்யாணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரச்சிதா ராம் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இவர் கன்னடத்தில் வெளியான ‘புல்புல்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரச்சிதா.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், உபேந்திரா, தர்ஷன், சுதீப் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.

இதனால், கன்னடத்தில் இவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கின்றனர். அதை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது, கூலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆக தற்போது லேடி சூப்பர்ஸ்டார் என்றால் அது நயன்தாராவா அல்லது ரச்சிதா ராமா என்ற கேள்வி எழுகின்றது.

முன்னதாகஎன்னை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்என்று நயன்தாரா நேர்காணல்களில் கூறினார்.

ஆனால் படங்களில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாா என்று போட நயன்தாரா தான் கூறுவார் என்று திரைப்பட இயக்குனர்களும் கூற இந்தலேடி சூப்பர்ஸ்டார்பட்டமே ஒரு சர்ச்சையாகத்தான் போய்க்கொண்டு இருக்கின்றது.

தற்போது நயன்தாராவுக்கு திரைப்படங்கள் சரியாக அமைவதில் அவரது மார்க்கெட் டல் ஆகி விட்டது என்று கூறப்படும் நிலையில், புதிய லேடி சூப்பர்ஸ்டார் ஒருவர் வந்துவிட்டார்.

ஆக நயன்தாராவின் கதை இனி முடிந்துவிட்டதா? இல்லை என்றால் புதிய லேடி சூப்பர்ஸ்டார் காணாமல் போய்விடுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்