பொழுதுபோக்கு

ஆன்மீக பயணத்தில் ரஜினிகாந்த்.. மனுசன் எங்க எப்படி இருக்காருனு தெரியுமா? வெளியான புகைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த மாதம் முதல் கூலி படத்தின் ஷூட்டிங்கில் இணையுள்ள ரஜினிகாந்த், இடையில் கிடைத்த கேப்பில், கடந்த சில தினங்களாக அபுதாபியில் முகாமிட்டிருந்தார்.

அங்கு அவருக்கு வழங்கப்பட்ட கோல்டன் விசாவை பெற்றுக் கொண்டதுடன் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து மந்தீருக்கும் விசிட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்து சில ஆண்டுகளுக்கு முன்னதாக தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் இடையில் கிடைக்கும் இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு ஆன்மீக சுற்றுப்பயணங்களுக்கு குறிப்பாக இமய மலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த பயணங்களை அவர் தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அடுத்தடுத்த ஆன்மீக பயணங்களில் தன்னை இணைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தன்னுடைய ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் பகுதியில் அமைதியான இடத்தில் அமர்ந்திருக்கும் ரஜினிகாந்த், அங்கிருந்து வியூவை பார்க்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் மிகவும் எளிமையாக தன் தோள் மீது ஷால் போட்டுக் கொண்டு அமைதியாக தன்னை சுற்றியுள்ளவற்றை பார்வையிடுவதாக அமைந்துள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!