படம் ஒன்றின் டைட்டில் டீசரை வெளியிடுகின்றார் ரஜினிகாந்த்
நடிகர் சசி குமார் நாயகனாக நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்.
இந்த நிலையில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.
இந்த புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகும் இப்படத்தில், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, இந்தப் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசரை நாளை (22) மாலை 6 மணிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)





