பொழுதுபோக்கு

ஆஸ்காரில் நுழைந்த ராயன்… மிகப்பெரிய சாதனை படைத்த தனுஷ்

தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருப்பதுடன், படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியது.

தனுஷ் நடிகராக தனது 50வது படத்தை தானே இயக்கி தானே நடித்துள்ளார். இதனால் திரைத்துறையினர் பலரும் தனுஷ்க்கு வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் திரைக்கதை புத்தகத்தினை ஆஸ்கர் விருதினை வழக்கும் அகாடமி நிறுவனமான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வாகியுள்ளது.

இந்த தகவலை ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் சன் பிக்சர்ஸ் நிறுவனம், தனுஷ் மற்றும் ராயன் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலைக் கேள்விப்பட்ட பலர் ஒரு இயக்குநராக தனுஷ்க்கு இது மாபெரும் பெருமை என பலரும் தனுஷை பாராட்டி வருகின்றனர்.

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content