புலி ஆதரவு தமிழ் டயஸ்போராக்களுக்கு ‘ஐஸ்’ வைப்பு: மஹிந்த அணி கொதிப்பு!
“இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா நாட்டுக்காக நடத்தப்பட்டதா அல்லது புலி ஆதரவு தமிழ் பிரிவினைவாத டயஸ்போராக்களை திருப்திப்படுத்த நடத்தப்படதா.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சரத் வீரசேகர Sarath Weerasekara கேள்வி எழுப்பியுள்ளார்.
“இலங்கை 17 தடவைகள் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. எனினும் எமது மூதாதையர்கள் நாட்டைப் பாதுகாத்தனர்.
1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றாலும் 72 ஆம் ஆண்டிலேயே அது முழு சுதந்திரமாக மாறியது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ புலிகள் அமைப்பை எமது படையினரே வெற்றிகொண்டனர். இதற்காக பலர் உயிர் தியாகம் செய்தனர். மேலும் பலர் அங்கவீனமுற்றார்கள்.
போரை முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இராணுவ தளபாடங்கள் சுதந்திர தின அணி வகுப்பில் இம்முறை காட்சிப்படுத்தப்படவில்லை.
படை நடவடிக்கையில் பங்கேற்ற படையினர் அணிவகுப்பாக செல்லும்போது போரை முடித்தது பற்றி அறிவிப்பு விடுக்கப்படவில்லை. டித்வா புயல் பற்றியே பேசப்பட்டது.
இது தவறாகும். புலி டயஸ்போராக்களுக்கு அச்சம் காரணமாகவே அதனை சொல்லாமல் இருந்திருக்கலாம்.
போர் தளபாடங்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்தவை, எனவே, அவற்றை காட்சிபடுத்த வேண்டியதில்லை என ஆளுங்கட்சி விளக்கமளிக்கின்றது.
அப்படியானால் அணிவகுப்பில் சென்ற படையினர் வைத்திருந்த துப்பாக்கிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையா எனவும் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.





