ஐரோப்பா முக்கிய செய்திகள்

எப்ஸ்டீன் கோப்புகளில் 1,005 முறை இடம்பெற்ற புட்டினின் பெயர்!

மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 3.5 மில்லியன் பக்க கடிதப் போக்குவரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பெயர் 1,005 முறை இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய ஆவணங்களில்  புட்டினை சந்திப்பதற்கு எப்ஸ்டீன் முயன்றதாக கூறப்படுகிறது.

புட்டினை சந்திக்க எப்ஸ்டீன் பலமுறை விருப்பம் தெரிவித்ததாக கோப்புகள் காட்டுகின்றன. இருப்பினும், இருவரும் சந்தித்ததற்கான எந்த ஆதாரமும் கோப்புகளில் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதர் விட்டலி சுர்கின் (Vitaly Churkin) எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.  நீதித்துறை வெளியிட்ட ஆவணங்கள், அவர்கள் இருவரும் தொடர்ந்து சந்தித்ததாகக் காட்டுகின்றன.

மேலும் சுர்கினின் மகன் மாக்சிமுக்கு (Maxim) நியூயார்க்கில் உள்ள ஒரு செல்வ மேலாண்மை நிறுவனத்தில் வேலை கிடைக்க உதவவும் எப்ஸ்டீன் முன் வந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் புட்டினின் நெருங்கிய உதவியாளரும் ரஷ்ய வெளியுறவு அமைச்சருமான செர்ஜி லாவ்ரோவை  (Sergei Lavrov) சந்திக்க எப்ஸ்டீன் நோர்வே அரசியல்வாதி தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்டைத் (Thorbjorn Jagland) தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அது சாத்தியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் பாரிஸில் உள்ள ஜாக்லாண்டிற்கு சொந்தமான இல்லத்தில் புட்டின் மற்றும் செர்ஜி லாவ்ரோவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க-ரஷ்ய உறவுகளில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் ரஷ்ய தலைவர்கள் எப்ஸீடினுடன் தொடர்பில் இருந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!