சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை ஆரம்பித்தார் புட்டின்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் தனது 5-வது பதவிக்காலத்தை தொடங்கிய பிறகு புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் உலக அரசியல், உக்ரைன் போர் மோதல்கள் மற்றும் காஸா போர் குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.
உக்ரைன் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை ரஷ்யாவும் சீனாவும் வலியுறுத்துவதாக புடின் கூறியுள்ளார்.
மேலும், காஸா போருக்கு இரு நாடுகள் தீர்வு காண்பதே சிறந்த தீர்வு என்றும் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
ஓராண்டு குறுகிய காலத்தில் இரு சீன மற்றும் ரஷ்ய தலைவர்களுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.
(Visited 7 times, 1 visits today)