புஷ்பா 2 ஓடிடியில் உலகளவில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.இதை தொடர்ந்து படக்குழு பதிவிட்ட போஸ்டர் பரபரப்பு .
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/1635650341_pushpa-2-4_202412.jpg)
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி சாதனை படைத்த படமான புஷ்பா 2 ஓடிடியில் உலகளவில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2: தி ரூல். ஒருபுறம் இந்தப் படம் சாதனை படைத்தாலும் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. புஷ்பா 2 படம் பார்க்க சென்ற ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அல்லு அர்ஜூன் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு படக்குழுவினர் நிதியுதவி அளித்தனர்.
(Visited 2 times, 2 visits today)