இந்தியா செய்தி

G20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பொது விடுமுறை அறிவிப்பு

தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கும்படி டெல்லி தலைமை செயலாளரிடம் டெல்லி போலீசார் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர்.

இதேபோல், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு உட்பட்ட வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டிருந்தது.

இந்நிலையில், போலீசாரின் கோரிக்கையை ஏற்று ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் டெல்லியில் பொது விடுமுறை என அறிவிக்க முதல் மந்திரி கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நாட்களில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!