மாகாணசபைத் தேர்தல்: சஜித் அணி எடுத்துள்ள முடிவு!
மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக்குழு கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றிரவு கூடியது.
இதன்போது வரவு- செலவுத் திட்டம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
அவ்வேளையிலேயே அடுத்த வருடம் ஆரம்பத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் சமரை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழ் உள்ள உள்ளாட்சிமன்ற சபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
அதேவேளை, நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற முடிவில் ஐக்கிய மக்கள் சக்தி மாற்றம் மேற்கொள்ளவில்லை.





