லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் – இருவர் கைது!
லண்டனில் நேற்று நடத்த பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்டங்களின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“இன்டிஃபாடா”( intifada – இஸ்ரேலுக்கு எதிரான கிளர்ச்சிகளைக் குறிக்க பாலஸ்தீனியர்களால் பயன்படுத்தப்படும் சொல்) அழைப்புகளை எழுப்பிய கோஷங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“இன்டிஃபாடாவை உலகமயமாக்கு” போன்ற சர்ச்சைக்குரிய கோஷங்களைப் பயன்படுத்தும் நபர்களைக் கைது செய்துள்ளதாக அறிவித்த பெருநகர காவல்துறையினர் புதிய அணுகுமுறையை பயன்படுத்தி மேற்படி கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிட்னியில் உள்ள போண்டி கடற்கரை (Bondi Beach) சம்பவம் மற்றும் மென்செஸ்டர் (Manchester) ஜெப ஆலயத்தில் நடந்த தாக்குதல் உள்ளிட்ட சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தக் கொள்கை மாற்றம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “அரசியல் அடக்குமுறை” என்று விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





