இரத்தக் கரை தோய்ந்த கைகளுடன் இஸ்ரேலியப் பிரதமருக்கு எதிராக போராட்டம்!
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து இஸ்ரேலிய பிரதமர் ஏழாவது முறையாக ட்ரம்பை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் அவரின் வருகைக்கு எதிராக வெள்ளை மாளிகையின் முன்பு ஏராளமான மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதன் போது நெதன்யாகுவின் முகமூடி அணிந்த ஒருவர் ஏவுகணைகளோடும் கையில் போலியான இரத்தக் கரையோடும் தன்னை சித்தரித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதே நேரம் ஏனைய போராட்டக்காரர்கள் காசாவில் இடம் பெற்ற போரை எதிர்த்து கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் ஒன்று கூடிய இந்த தருணத்தில் நெதன்யாகுவின் இந்த விஜயம் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.




