ஐவரி கோஸ்டில் ( Ivory Coast) அரசின் முடிவுக்கு எதிரான போராட்டம் – பலருக்கு சிறை தண்டனை!

ஐவரி கோஸ்டில் ( Ivory Coast) வரவிருக்கும் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் விலக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற 26 எதிர்க்கட்சி போராட்டக்காரர்களுக்கு 36 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் ஏறக்குறைய 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான அந்நாட்டில் வரும் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அலசேன் ஔட்டாராவுக்கு (Alassane Ouattara) முக்கிய போட்டியாளராக பரவலாகக் கருதப்படும் டிட்ஜேன் தியாமை (Tidjane Thiam) விலக்கியதற்கு எதிப்பு தெரிவித்தே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிட்ஜேன் தியாம் (Tidjane Thiam) பிரெஞ்சு குடியுரிமை பெற்றமையால் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.