டிட்வா சூறாவளி இழப்பீடு வழங்குவதில் சிக்கல்
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் திட்டத்திலிருந்து விலகுவதாகக் கிராம உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர்.
அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய சுற்று நிருபத்தில் பல குறைபாடுகள் உள்ளதாகவும், இதனால் இழப்பீடுகளைத் தீர்மானிப்பதில் கிராம உத்தியோகத்தர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க, முறையான வழிகாட்டல்கள் இன்றி இந்தப் பணிகளைத் தொடரப்போவதில்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களின் இந்த முடிவால், சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.





