விஜய்க்காக ஆதரவு குரல் எழுப்பும் பிரியங்கா சோப்ரா!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் Vijay மற்றும் நடிகை திரிஷா Trisha தொடர்பில் பல கோணங்களில் கதை அடிபடும் நிலையில், விஜய்யை புகழ்ந்து மற்றுமொரு நடிகை கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது முதல் படத்தின் நாயகன் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே நடிகை பிரியங்கா சோப்ரா, Priyanka Chopra விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார்.
விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது முதல்படம் மற்றும் முதல் ஹீரோவை பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,
‘சினிமாவில் எனது முதல்படி தமிழ். என் சக நடிகர் விஜய் மிகவும் பிரபலமானவர்.
படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்க்கவும் நடனத்தை பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் கூடியிருப்பார்கள். இதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
விஜய் ரசிகர் கூட்டத்தை பார்த்த போது அவர் ஒரு கடவுளை போல எனக்கு தோன்றியது. இந்தியாவில் மக்கள் நட்சத்திரங்களை ஆர்வத்துடன் விரும்புகிறார்கள் என பிரியங்கா சோப்ரா மேலும் கூறினார்.




