நீண்டநாள் காதலருடன் அவுஸ்திரேலியாவில் ஜாலியாக இருக்கும் பிரியா பவானி சங்கர்…
																																		காதலனுடன் வெளிநாட்டில் அவுட்டிங் சென்றபோது எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை நடிகை பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2, அஜய் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி 2 போன்ற படங்கள் உள்ளன. இதில் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 13-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

தற்போது ஷூட்டிங்கில் இருந்து பிரேக் எடுத்துள்ள பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலனை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். அங்குள்ள சிட்னி நகரில் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை பிரியா பவானி சங்கர் ராஜவேலு என்பவரை தன்னுடைய கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வருகிறார். திருமணத்துக்கு முன்பே காதலனுடன் அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர், தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், சிட்னி தனக்கு இரண்டாவது வீடு போன்றது என்றும், இதுவரை பலமுறை அங்கு சென்றிருந்தாலும் இம்முறை தனக்கு அந்நகரம் மிகவும் அழகாக தெரிந்ததாகவும் அதற்கு காரணம் தனது காதலன் தான் என பதிவிட்டு இருக்கிறார் பிரியா.

        



                        
                            
