பொழுதுபோக்கு

காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து – ப்ரியா பவானி சங்கரின் வைரல் பதிவு!

தன் காதலருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு மகிழ்ச்சியானப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை என வளர்ந்த ப்ரியா பவானி சங்கர் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ராஜ் என்பவரைத் தன் கல்லூரி நாட்களில் இருந்தே காதலித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இதைப் பல பேட்டிகளிலும் வெளிப்படையாகவேப் பகிர்ந்துள்ளார் ப்ரியா. ‘எப்போது கல்யாணம்?’ எனப் பலரும் கேட்டு வரும் நிலையில், ‘அதற்கான நேரம் நிச்சயம் வரும்’ என சொல்லி இருக்கிறார் ப்ரியா. இந்த சூழ்நிலையில்தான் தனது காதலரது பிறந்தநாளுக்கு அவருடன் இருக்கும் மகிழ்ச்சியானப் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

Priya Bhavani Shankar's Emotional Note For Her Special Someone | RITZ

அந்தப் பதிவில், ‘நீ என்னுடைய சிறந்த நண்பன். நாம் இருவரும் சிரித்திருக்கிறோம், சண்டைப் போட்டிருக்கிறோம், நிறைய அழுதிருக்கிறோம். தவறான வரிகளுடன் பிடித்தப் பாடலைக் கூட நீ சத்தமாக நம்பிக்கையுடன் பாடுவாய். நாங்கள் இருவரும் வெவ்வேறானவர்கள். இருந்தாலும் உன்னோடு எப்படியாவது காதலோடு என்னை இருக்க வைத்திருக்கிறாய். உன்னோடு என்னால் சத்தமாக சிரிக்கவும் முடியும், அமைதியாக உட்கார்ந்து இயற்கையை ரசிக்கவும் முடியும். என் வாழ்க்கையை இனிமையாக்க நீ மட்டும் எப்போதும் போதும்’ என தன் அழகான பிறந்தநாள் வாழ்த்தைக் கூறியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்

Mithu

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!