இலங்கை செய்தி

பொருளாதார மீட்சி குறித்து ஐரோப்பிய ஆணையாளருடன் பிரதமர் ஆராய்வு!

சர்வதேச பங்களிப்புக்கான ஐரோப்பிய ஆணையாளர் சப் சிகேலாவுடன் Jozef Síkela பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார்.

உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படி சந்திப்பை அவர் நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியவை வருமாறு,

“ சர்வதேச பங்களிப்புக்கான ஐரோப்பிய ஆணையாளர் சப் சிகேலாவைச் சந்தித்து ஆக்கபூர்வமான இருதரப்புப் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுத்தேன்.

இதன்போது, பொருளாதார மீட்சி, கல்விச் சீர்திருத்தம், டிஜிட்டல் பரிமாற்றம், காலநிலை சகிப்புத்தன்மை மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகியவற்றில் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து நாம் கலந்துரையாடினோம்.

அத்துடன், இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மற்றும் நீண்டகால வளர்ச்சி பற்றிய முன்னுரிமைகளுக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதிப்படுத்தியது.” – என்றார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!