இலங்கை

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள 1,000 கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தாம் 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான கூடுதல் செலவினங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக இலங்கையில் உள்ள இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முக்கிய இறக்குமதியாளர்கள் தங்களுக்கு ஒரு கொள்கலனுக்கு 100,000 வீதமும் சிலருக்கு அதிகரித்த போக்குவரத்துக் கட்டணங்கள், துறைமுக தாமதக் கட்டணம் மற்றும் கூடுதல் பணியாளர் தேவைகள் காரணமாக ரூ. 300,000 வரையில் செலவு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தாமதமான கொள்கலன்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முக்கியமான பொருட்கள் இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். கொள்கலன்களை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், இறக்குமதியாளர்கள் தமக்கு ஏற்பட்ட கூடுதல் செலவினங்களை நுகர்வோருக்கு கடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதிச்சுமை தங்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என சுட்டிக்காட்டிய இறக்குமதியாளர்கள், கொழும்பு துறைமுகத்தின் திறமையின்மை காரணமாகவே தாமதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்